ஈஸ்ட் பெங்கால் கலக்கல்
கோல்கட்டா: ஐ.டபிள்யு.எல்., லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி இரண்டாவது வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் 8 வது சீசன் நடக்கிறது. நடப்பு சாம்பியன் ஒடிசா, கோல்கட்டாவின் ஈஸ்ட் பெங்கால் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், ஸ்ரீபூமி அணிகள் மோதின. முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் இரண்டாவது பாதியில் 77 வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீராங்கனை சவுமியா, ஒரு கோல் அடித்தார். முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் தொடர்ந்து பெற்ற இரண்டாவது வெற்றி இது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கோகுலம் கேரளா, கிக்ஸ்டாட் கர்நாடகா அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. கர்நாடகாவின் சஞ்சு (6வது), கேரளாவின் பஜில்லா (36) தங்கள் அணிக்கு கோல் அடித்தனர்.