வேன் மோதி முதியவர் பலி
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த, அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 78; நேற்று மாலை, திருத்தேரி பகத்சிங் நகர் பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு நடந்து சென்றார்.
மகேந்திரா சிட்டி ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரம் மாவட்டம், கோணாதிகுப்பம் பகுதியில் இருந்து, சென்னை நோக்கி வந்த, 'மகேந்திரா டூரிஸ்டர்' வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டிரைவர் காளிதாசன், 40, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement