மகாலட்சுமி பாலிடெக்னிக் கைப்பந்து போட்டியில் முதலிடம்

கடலுார் : கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில் நாகப்பட்டிணம் - புதுச்சேரி மண்டலத்தைச் சேர்ந்த 180 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம், விழுப்புரம் சூர்யா பாலிடெக்னிக் இரண்டாமிடம், மயிலாடுதுறை ஏ.வி.சி.பாலிடெக்னிக் அணி மூன்றாமிடம், புத்துார் சீனுவாச சுப்பையா பாலிடெக்னிக் கல்லுாரி நான்காமிடம் பிடித்தது.

பெண்கள் பிரிவில் கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடம், வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடம், கடலுார் மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தது. போட்டியில் வென்ற அணிகளுக்கு மகாலட்சுமி கல்வி குழுமங்களின் தலைவர் ரவி, தாளாளர் தேவகி ரவி, கல்லுாரி துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், முதல்வர் இளவரசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

விழாவில், மேலாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷ்லி, உடற்கல்வி இயக்குனர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement