பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னருடன் திடீர் சந்திப்பு

புதுச்சேரி: பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் கவர்னரை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பிறகு பா.ஜ., வில் 6 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். கடந்த மாதம் 28ம் தேதி ராஜ்நிவாசில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர், ரிச்சர்டு ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, தொகுதியின் அடிப்படை பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டும் என மனு அளித்து இருந்தனர். தொகுதி பிரச்னை குறித்து முதல்வரை சந்திக்காமல் கவர்னரிடம் மனு கொடுத்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ராஜ்நிவாஸ் சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ., அங்காளன் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை நேற்று சந்தித்து பேசினர்.

நீண்ட நேரமாக கவர்னர் கைலாஷ்நாதனுடன் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு குறித்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'கவர்னருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தோம். பதிலுக்கு அவரும் வாழ்த்த தெரிவித்தார். அரசியல் முக்கியத்துவம் இல்லை' என்றனர்.

Advertisement