சனீஸ்வர பகவான் கோவிலில் மாட்டுப்பொங்கல் சிறப்பு பூஜை

புதுச்சேரி: சனீஸ்வர பகவான் கோவிலில் நடந்த மாட்டுப்பொங்கல் சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அருகில், மொரட்டாண்டியில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. அங்கு மாட்டுப்பொங்கலையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை,பசு மாடு,கன்றுகளுக்கு, கோ-பூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட, 16 வகை பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்துமாடுகளை அழைத்து சென்று, கோவிலை வலம் வந்து,'கோ சாலை'யில் நிறுத்தி பக்தர்கள் ஆசி பெற்றனர்.

இந்த வழிபாட்டில், ஆலய நிறுவனர் சிதம்பர கீதாராம் குருக்கள், மகேஸ்வரி, கீதா சங்கர் குருக்கள், ஸ்ரீவித்யா, ஆசிரியர் கீதா ரமேஷ், கீதா மாலினி, சீதா ராமன், மகாலட்சுமி, நாகராஜ ஐயர், நாகலட்சுமி, லலிதாம்பிகை வேதபாட சாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement