ஹெல்மெட் வழங்கல்

புதுச்சேரி: புதுவை மக்கள் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நோணாங்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் சிவசரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வமணி, பொதுச்செயலாளர் ஜெயமுருகேசன், பொருளாளர் கணேசன், தமிழ் வளர்ச்சி செயலர் மோகன்ராஜ், செயலாளர்கள் ஆறுமுகம், பிரபா, புண்ணியமூர்த்தி, ராஜ்குமார், முருகன், பச்சையப்பன், குமரன், முருகானந்தம், வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுவை மக்கள் தமிழ்ச் சங்கம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிர்வாகிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப் பட்டன.

Advertisement