திருவள்ளுவர் சிலைக்கு கவர்னர், முதல்வர் மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரியில் திருவள்ளுவர் உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசு சார்பில், திருவள்ளுவர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், எதிர்க்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பாஸ்கர், ராமலிங்கம், லட்சுமிகாந்தன், அனிபால் கென்னடி, செந்தில்குமார் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர்.

Advertisement