தி.மு.க., சார்பில் முப்பெரும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் தமிழ் புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் ஆகிய முப்பெரும் விழா தலைமை அலுவலகத்தில் நடந்தது.

மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருவள்ளுவர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அவைத் தலைவர் சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், சக்திவேல், தங்கவேலு, வேலவன், தர்மராஜன், பிரபாகரன் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.

Advertisement