தடையை மீறி இறைச்சி விற்பனை

புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி நேற்று இறைச்சி விற்பனை ஜோராக நடந்தது.

உழவர்களுக்கு பேரூதவியாக திகழும் மாடுகளுக்கு நன்றி கூறும் விதமாக உழவர் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் தினமும் நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனால் புதுச்சேரி முழுதும் மதுபானம் விற்பனை, இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்து இருந்தது.

ஆனால் பல சாராயக்கடைகளின் அருகில் மறைவான இடங்களில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை செய்யப்பட்டது.

அதுபோல், புதுச்சேரி முழுதும் தடையை மீறி மாட்டு இறைச்சி, ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் திறந்து விற்பனை நடந்தது.

மேட்டுப்பாளையம், சுல்தான்பேட்டை, பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை என பல இடங்களில் இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்பட்டது. சில இடங்களில் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து, கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஆபராதம் செலுத்திய பின்பு வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது.

Advertisement