தமிழறிஞர்கள் கவுரவிப்பு
புதுச்சேரி: தமிழ்சங்கத்தில் நடந்த சமத்துவ விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி தமிழ் சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல், திருவள்ளுவர் நாள் விழா, தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா, அயலக தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனுமோகன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் லட்சுமிநாராயணன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, தமிழ்நாள் காட்டியை வெளியிட்டார். தொடர்ந்து சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்தனர்.
மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் கவுரவிக்கப்பட்டு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரான்ஸ் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பாஸ்கர், ஆட்சி குழு உறுப்பினர்கள் உசேன், ராசா, சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.