மனைவி கொலை கணவர் சரண்
மைசூரு: மனைவியின் தவறான நடத்தையால், வெறுப்படைந்து அவரை கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
மைசூரு ஹெச்.டி.கோட்டேவின், கனியனஹுன்டி கிராமத்தில் வசிப்பவர் தேவராஜ், 30. இவருக்கும், மைசூரு நகரின் கோபாலபுராவை சேர்ந்த தேஜு, 26, என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், வேறொரு ஆணுடன் தேஜுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் கண்டித்தும் திருந்தவில்லை. சில மாதங்களுக்கு முன், கணவர், குழந்தைகளை விட்டு விட்டு, கள்ளக்காதலருடன் தேஜு ஓடிவிட்டார். ஒரு வாரத்துக்கு முன், அவரை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். இரண்டு குடும்பங்களின் மூத்தவர்கள் புத்திமதி கூறியதால், தேஜுவை தேவராஜு சேர்த்து கொண்டார்.
மனைவியால் தன் குடும்ப மானம் போனதால், தேவராஜ் வருத்தத்தில் இருந்தார். இது விஷமாக நேற்று மதியம், தம்பதி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த தேவராஜ், அரிவாளால் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்தார். அதன்பின் ஹெச்.டி.கோட்டே போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.