ஈரோடு மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ஈரோடு: மாநகராட்சி கமிஷனர் மணீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாநகராட்சியின், வரதல்லுார் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும், பிரதான நீரேற்று குழாயிலிருந்து சூரியம்பாளையம் குடிநீர் சேகரிப்பு தொட்டிக்கு செல்லும் வால்வு பழுதடைந்துள்ளது.
இதனை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 15 பிற்பகல் முதல், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் இருக்காது. பழுது நீக்கம் சரி செய்யப்பட்டவுடன், படிப்படியாக குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும். எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement