சிறுத்தையை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மைசூரு: மைசூரு ஹெப்பால் பகுதியில் இன்போசிஸ் நிறுவனம் அமைந்து உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், கடந்தாண்டு டிச., 31ல் வளாகத்திற்குள் சிறுத்தையை பார்த்ததாக, ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வனத்துறையினருக்கு, நிறுவனத்தினர் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, 80க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், மைசூரு மண்டல வனத்துறை அதிகாரி பசவராஜ் நேற்று அளித்த பேட்டி:

சிறுத்தை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. சிறுத்தையை கண்காணிக்க, கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனால் கடந்த 10 நாட்களாக சிறுத்தையின் கால் தடம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடடிக்கைகள் குறித்து நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே வேளையில் இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன்களை பயன்படுத்தி, வளாகத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Advertisement