6 வயது சிறுமியை பலாத்காரம்  செய்து கொன்ற பீஹார் வாலிபர் 

ராமமூர்த்திநகர்: பெங்களூரில், 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, ராமமூர்த்தி நகர் அருகே ஹொய்சாளா நகரில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டட காவலாளியாக, நேபாளத்தை சேர்ந்தவர் வேலை செய்து வருகிறார். கட்டடம் அருகே கூடாரம் அமைத்து மனைவி, 6 வயது மகள் உட்பட மூன்று பிள்ளைகளுடன் வசித்தார்.

இந்த கட்டடத்தில் தொழிலாளியாக, கடந்த சில தினங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார், 25 என்பவர், வேலைக்கு சேர்ந்தார். கடந்த 13ம் தேதி இரவு, 6 வயது சிறுமி, கட்டடத்தின் முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபிஷேக் குமார், சிறுமியை பிடித்து இழுத்து சென்று வாயை மூடி பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய், மகள் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அபிஷேக் குமார் தலையில் மரக்கட்டையால் தாக்கினார். அவர் மயங்கி விழுந்தார்.

மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்த சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். வாயை மூடி பலாத்காரம் செய்ததால், மூச்சு திணறி சிறுமி இறந்தது தெரிந்தது.

இதற்கிடையில், கட்டடத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், அபிஷேக் குமாரை தாக்கினர். தகவல் அறிந்த ராமமூர்த்தி நகர் போலீசார் வந்து, அபிஷேக் குமாரை கைது செய்தனர்.

Advertisement