சவுடேஸ்வரி அம்மன் கோவில் பந்தலில் தீ

அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், அந்தியூரில் இருந்து தவிட்டுப்பாளையத்திற்கு அம்மனை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:30 மணியளவில் கோவில் முன் மலைக்கருப்புசாமி கோவில் செல்லும் சாலையில், தென்னங்கீற்றால் ஆன பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கே உள்ள மின்கம்பத்தில் இருந்து, திடீரென தீப்பொறிகள் பறந்து வந்து, தென்னங்கீற்றின் மீது விழுந்து தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் பேராடி தீயை அணைத்தனர். தற்போது கோவிலில் பண்டிகை நடந்து வருகிறது. இந்நிலையில் பந்தலில் தீ பிடித்தது, பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement