பெரியமடத்துப்பாளையத்தில் மாட்டு பொங்கல் விழா

பெருந்துறை: பெருந்துறை நகராட்சி வார்டு -9க்குட்பட்ட, பெரியமடத்துப்பாளையம் பகுதியில் நேற்று தைப்பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


விழாவிற்கு, அ.தி.மு.க., பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்து, பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினார். விழாவில், பெருந்துறை நகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் ஆட்டோ பழனிசாமி, தெற்கு தோட்டம் ராமர், ராஜா, புகழேந்திரன், முருகசாமி, ஈஸ்வரமூர்த்தி, சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement