2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

மல்லசமுத்திரம்: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, ௩ பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.

மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை ரேஷன் கடை அருகில், நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒருவீட்டில் இருந்து ரேஷன் அரிசியை வேனில் ஏற்றி கடத்திச்செல்வதாக, மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., ஆறுமுகநயினார், திருச்செங்கோடு டி.எஸ்.ஓ., விஜயா, முதல்நிலை காவலர்கள் வினோத், கார்த்திக், எலச்சிபாளையம் எஸ்.ஐ., பொன்குமார் ஆகியோர், 2 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் வீரகுமார், 46, ஒடிசா மாநிலம், கோனா பகுதியை சேர்ந்த லோடு மேன்கள் உபாஹரிஜன், 26, சனபத்பத்ரா, 22, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வையப்பமலையை சேர்ந்த புரோக்கர் கருணாகரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement