ரகசிய குழாய் அமைத்து சாயக்கழிவு வெளியேற்றம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர், நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து விடுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு, புற்றுநோய், கிட்னி பாதிப்பு, வயிற்று பிரச்னை, தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.


கடந்த மாதம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, சாயக்கழிவுநீர் வெளியேற்றினால், சாய ஆலைகள் மீது, 'சீல்' வைப்பு, மின் துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கைவிடுத்தார். ஆனால், தொடர்ந்து விதிகள் மீறி சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 14 மதியம் குட்டைமுக்கு பகுதியில் ரகசிய குழாய் மூலம் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement