அறிவியல் துளிகள்
01. மைசெனா க்ரோகடா என்பது ஐரோப்பாவிலும், ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான் வகைகளுள் ஒன்று. இதற்கு ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று. தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
02. நுண்நெகிழிகளால் ஏற்படும் கேடுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது, மக்களால் பரவலாக உண்ணப்படும் கடல் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் இருப்பதை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ட்லாந்து மாநிலப் பல்கலை கண்டறிந்துள்ளது. இவற்றை உட்கொண்டால் நம் உடல் நலமும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
03. சில தாவரங்கள் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக இருக்கும். ஆனால், வால்நட் மரம் பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும். இது ஏற்கனவே அறியப்பட்ட விஷயம் தான் என்றாலும், முதன்முறையாக இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
04. அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உடலுக்கு பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
05. தென் அமெரிக்க நாடான உருகுவேயில், விஞ்ஞானிகள் மீசோசர்ஸ் (Mesosaurs) எனும் கடல்வாழ் உயிரினத்தின் தொல்லெச்சத்தைக் கண்டறிந்துள்ளனர். இவை, டைனோசர்கள் போல் ஒருகாலத்தில் வாழ்ந்து அழிந்துவிட்டவை.