கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் குதுாகலம்
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது பொங்கலுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இவர்கள் மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்ததுடன், அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வாசலுார்பட்டியில் உள்ள படகு இல்லத்தில், படகு சவாரி செய்து குதுாகலமடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement