மகரஜோதி விழா
செஞ்சி: செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் 4ம் ஆண்டு மகரஜோதி விழா மற்றும் படி பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமும், 10.00 மணிக்கு நெய் அபிஷேகமும் நடந்தது. 12 மணிக்கு சமபந்தி விருந்தும், 3 மணிக்கு 18 படி வேள்வி பூஜையும் நடந்தது.
மாலை 6.30 மணிக்கு தர்ம கோவில் உச்சியில் மகரஜோதி ஏற்றி மகா தீபாரதனை நடந்தது. இரவு 8.00 மணிக்கு செண்டை மேளத்துடன் சிறப்பு அலங்காரத்தில் தர்ம சாஸ்தா ஐயப்பன் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement