திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
தர்மபுரி: கன்னியாகுமரியில் அமைத்துள்ள, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட கலெக்டர் சாந்தி மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருக்குறள் விளக்க உரை, திருக்குறள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பின், வாசகர் வட்டம் மூலம் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, வினாடி, வினா, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., காயத்ரி தாசில்தார் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement