'ராமருக்கு உதவிய அணில் போல'.., ஆலயத்திருப்பணி செய்ய வாருங்கள்!
பூசலார் நாயனார்.. தன்னிடம் வசதியில்லா நிலையில் மனதிலேயே சிவபெருமானுக்குக் கோயில் கட்டியவர். சிவனின் திருவிளையாடலாக அதே சமயத்தில், சோழ மன்னர் ஒருவரும் கோயில் கட்ட, பூசலார் கட்டிய மனக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான், மன்னர் மூலமாக அவரது பக்தியை உலகறியச் செய்தார். பூசலார் நாயனாரின் இருதயத்தில் எழுந்த கோயில் என்பதால், சென்னை அருகே திருநின்றவூரில் 'இருதயாலீஸ்வரர்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது இக்கோயில்.
பாக்கியத்தை தவற விடலாமோ ?
சொந்தமாக வீடு கட்டுவதே 'குதிரைக் கொம்பு!' எனும் போது, இறைவனுக்கு கோயில் கட்டுவது அவ்வளவு எளிய விஷயமா.? ஒரு கோயிலுக்கான திருப்பணியில் நாம் பங்கெடுக்கும் வாய்ப்பு வருகையில், நாம் அதை விட்டு விடலாமா.? எவ்வளவு பெரிய பாக்கியம் அது..! 'கருணைக்கடல் காஞ்சி மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்' அருளால்..!
புண்ணிய திருத்தலமான 'திருமாலிருஞ்சோலை' எனப்படும் மதுரை கள்ளழகர் கோயில் மலை அடிவாரத்தில், காஞ்சி மகாபெரியவர் திருக்கோயிலை அமைக்க இருக்கிறது 'மதுரை அனுஷத்தின் அனுக்கிரஹம்'.
கள்ளழகர் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் அமைந்திருக்கும் பொய்கைக்கரைப் பட்டியில், இயற்கை எழில் சூழ பொலிவுற அமையவிருக்கிறது இக்கோயில். இதற்கான பூர்வாங்கப் பணிகள் வெகு விரைவாக துவங்கப்பட உள்ளது.
மதுரையில், 'ஸ்ரீகாஞ்சி மகாபெரியவா கிருஹம்' என்னும் கோயிலை நிர்வகித்து நடத்திவரும் 'அனுஷத்தின் அனுக்கிரஹம்' நிறுவனர் நெல்லை பாலுவின் முயற்சியில் அமையவிருக்கிறது இந்தக் கோயில். அடுத்த ஓராண்டுக்குள் இந்தக் கோயில் கட்டுமானம் பூர்த்தி பெற்று ஸ்ரீஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் அருள் ஆசியோடு கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது.
அவரது அருளாசியைப் பெற்ற பக்தர்கள், "ராமருக்கு உதவிய அணில் போல", "ஊர் கூடி தேர் இழுப்பது போல" திருப்பணியில் பங்கு பெறும் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.!
எப்படி உதவலாம்?
>> திருப்பணிக்குப் பணமாக மட்டுமின்றி கட்டிட சாமான்கள், இதர பொருட்களாகவும் வாங்கிக் கொடுக்கலாம்.
>> கோயில் அமையவிருக்கிற இடம், கட்டுமானம் சேர்த்து சதுர அடி ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 500 ஆகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. சதுரடி வீதமாக ரூ.3,500 அல்லது 2 சதுர அடி, 5 சதுர அடி, 10 சதுர அடி என விரும்பும் அளவுகளில் அதற்கான தொகையை தரலாம்.
>> கோயில் அமைவதற்கான செலவுகள் பல லட்சங்களைத் தொடுவதால், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் நன்கொடை தரும் கொடையாளர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட இருக்கிறது.
நெல்லை பாலு,நிறுவனர் - அனுஷத்தின் அனுக்கிரகம்,
91 9442630815
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரி விலக்கும் உண்டு.
நன்கொடைகளை அனுப்ப வேண்டிய கணக்கு விவரம், தொடர்பு எண்:
GPay & Phonepay:
+91 9442630815
Ac Details:
Maduraiyun Atchaya Paathiram Trust,
AC No: 110031396472
Canara Bank- Madurai West Avani Moola Stteet Branch,
IFSC:
CNRB0001010
MICR: 625015006