தமிழகத்தில் பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. தமிழகத்தில் போலீசார் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை; இந்த நிலைக்கு காரணமான நிர்வாகத் ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டும்.
நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்த வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (3)
T.sthivinayagam - agartala,இந்தியா
19 ஜன,2025 - 14:31 Report Abuse
உங்களை வாழவைத்த முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கே பாதுகாப்பு தர முடியாத நீங்கள் பாதுகாப்பு பேசலாமா
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19 ஜன,2025 - 12:53 Report Abuse
தமிழகத்தில் ஆண்களும் பயந்து பயந்துதான் வாழவேண்டி இருக்கிறது.
0
0
Reply
Shivam - Coimbatore,இந்தியா
19 ஜன,2025 - 12:31 Report Abuse
தூத்துக்குடி சம்பவத்தை நீங்கள் டிவி பார்த்து தெரிந்து கொணடதைப்போல் இந்த சம்பவங்களை நாங்களும் டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டோம். தானிக்கு தீனிக்கு சரியாப்போச்சு
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement