இந்திய அரசுக்கு எதிராக போராட்டமா? ராகுல் மீது பாய்ந்தது வழக்கு
கவுகாத்தி: ' நாட்டின் ஒட்டு மொத்த அமைப்புகளையும் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கைப்பற்றிவிட்டன. தற்போது, நாம் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மட்மல்லாமல் இந்திய அரசையே எதிர்த்து போராடி வருகிறோம்,' எனக்கூறிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைநகர் டில்லியில், காங்கிரசின் புதிய தலைமை அலுவலகம் கடந்தசில நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. 'இந்திரா பவன்' என பெயரிப்பட்ட இந்த அலுவலக திறப்பு விழாவில் ராகுல் பேசியதாவது:பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்து, நாங்கள் போராடுகிறோம் என நீங்கள் நம்பினால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு புரியவில்லை என, அர்த்தம்.
பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நம் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றியுள்ளன. தற்போது நாங்கள், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்திய அரசையே எதிர்த்து போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அசமை சேர்ந்த மோன்ஜித் சேத்தியா கவுகாத்தி போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: பேச்சு சுதந்திரத்திற்கு அளித்த எல்லையை மீறும் வகையில் ராலின் பேச்சு அமைந்துள்ளது. பொது அமைதிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளது.இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் எனக்கூறியதன் மூலம், மக்கள் இடையே நாசவேலையை நடவடிக்கைகளையும், கிளர்ச்சியையும் வேண்டுமென்றே தூண்டி விடுகிறார். அமைதியின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு ஆபத்தான விஷயத்தை உருவாக்க முயற்சி நடக்கிறது எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து ராகுல் மீது பிஎன்எஸ் 152 மற்றும் 197(1)(டி) என்ற இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் என்ற பிரிவின் கீழ் கவுகாத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.