மனு பாகர் உறவினர்கள் இருவர் விபத்தில் மரணம்

சர்க்கி தத்ரி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாகரின் பாட்டி மற்றும் தாய்மாமன் இருவரும் சாலை விபத்தில் இன்று மரணமடைந்தனர்.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மனு பாகரின் தாய்வழி பாட்டியும் தாய்மாமன் இருவரும் இன்று காலை ஹரியானா மாநிலம் மஹேந்திரகர் பைபாஸ் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் மனுவின் பாட்டி மற்றும் தாய்மாமன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement