ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை: விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு ரத்து

1


மதுரை: முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, அப்போதைய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரை செய்திருந்தது.


இது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.இதற்கிடையே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.


முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.


'அதுமட்டுமின்றி, ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை நீக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Advertisement