மடிப்பாக்கத்தில் நுாலகம் அமைக்க எதிர்பார்ப்பு
மடிப்பாக்கம்,மடிப்பாக்கத்தில், 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 50,000த்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உள்ளனர்.
எனவே, இங்கு பொது நுாலகம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசு நிலத்தில், பொது நுாலகம் அமைத்தால், 187, 188 வார்டு மக்களுக்கு, பொதுவாக அமையும்.
எனவே, நீண்ட நாள் கோரிக்கையான நுாலகம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement