கொடைக்கானலில் ரம்யமான சூழல்
கொடைக்கானல் : கொடைக்கானலில் இரு தினங்களாக அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. மோசமான வானிலையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்து விடுதிகளில் முடங்கினர்.
நேற்று காலை முதலே வெயில் பளிச்சிட்டு இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. ரம்யமான சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தற்போதைய மழையால் கொடைக்கானலில் நிலவிய கடும் பனியின் தாக்கம் தணிந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement