பெண்ணிடம் 20 பவுன் நகையை வாங்கி மோசடி செய்தவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகார்த்திக் மனைவி ஆர்த்தி 24. இவரிடம் ராமநாதபுரம் உத்தரவைச் சேர்ந்த சங்குநாதன் 35, என்பவர் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடை நடத்தப்போவதாக 2023 ல் 20 பவுன் நகைகளை கடனாக பெற்றுள்ளார். அதன் பின் நகைகளை ஆர்த்தி திருப்பி கேட்ட போது ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து ஆர்த்தி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சங்குநாதனை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கைது செய்தார். பணமோசடி வழக்கில் சங்குநாதன் ஏற்கனவே ராமநாதபுரம் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.--------
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement