புகார் பெட்டி @ நெடுஞ்சாலையில் மாடுகளால் பீதி

நெடுஞ்சாலையில் மாடுகளால் பீதி



குன்றத்துாரில் இருந்து போரூர் செல்லும் நெடுஞ்சாலை வழியே, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், கோவூர், கெருகம்பாக்கம் பகுதியில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

மாடுகள் சாலையிலேயே படுத்து உறங்குவதால், அவற்றின் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் அடைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement