தபால் சேவையில் மாற்றம்

பல்லாவரம்,விரைவான கடித வினியோகத்திற்காக, பழைய பல்லாவரம் துணை அஞ்சலகத்தின் சில பகுதிகள், மடிப்பாக்கம் துணை அஞ்சலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய பல்லாவரம் துணை அஞ்சல் நிலையத்தின் அருள் முருகன் நகர் விரிவாக்கத்தில் நான்கு தெருக்கள், செந்தில் நகரில் நான்கு தெருக்கள், கிரேஸ் அவென்யூ, தணிகை தெருவில் குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றுக்கான கடிதம் மற்றும் பார்சல் வினியோகம் வரும், 27ம் தேதி முதல் மடிப்பாக்கம் துணை அஞ்சல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.

எனவே, அந்த பகுதி மக்கள், தங்களுடைய விரைவான தபால் பரிமாற்றத்திற்காகவும், பார்சல் வினியோகத்திற்காகவும், 600 091 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்துமாறு அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement