சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு?

சிந்தாதிரிப்பேட்டையில் துணை மேயர் கபால மூர்த்தி சாலை உள்ளது. இச்சாலையில், சிம்சன் பஸ் நிறுத்தம் அருகே, மூன்று நாட்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டது. விபத்தை தடுக்கும் வகையில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார், இரும்பிலான தடுப்புகளை அமைத்தனர். ஆனால், இன்று வரை சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சியோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ முன்வரவில்லை.

இதனால் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் ஓட்டுநர்களும், இதர வாகன ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

-எஸ்.கிருபாகரன், சிந்தாதிரிப்பேட்டை.

Advertisement