மன்னிப்பு கேட்கணும்!
சுதந்திர போராட்டம் குறித்து தேச விரோத கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம், மஹாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் அவமதிக்கப்படுவதை நாடு பொறுத்துக் கொள்ளாது.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச்செயலர், காங்.,
பொறுத்துக்கொள்ள மாட்டோம்!
மதச்சார்பற்ற அரசியலுக்கு தேசியவாத காங்., உறுதிபூண்டுள்ளது. மஹாராஷ்டிராவில், வெவ்வேறு சமூகங்களிடையே வெறுப்புகளை பரப்புவதையும், பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
அஜித் பவார்
மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,
ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!
அராஜகம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு பெயர் பெற்றது, ஆம் ஆத்மி. காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. இரு கட்சிகளுமே மக்களுக்கு எதிரானவை. டில்லி சட்டசபை தேர்தலில் இந்த கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
அனுராக் தாக்குர்
லோக்சபா எம்.பி., - பா.ஜ.,