புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பறவை, வண்ணத்துப்பூச்சி, தும்பி

மூணாறு: மூணாறைச் சுற்றியுள்ள இரவிகுளம், பாம்பாடும்சோலை, மதிகெட்டான் சோலை, ஆனைமுடி ஆகிய தேசிய பூங்காக்கள், சின்னார், குறிஞ்சிமலை ஆகிய வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் கடும்குளிர் நிலவிய ஜனவரி முதல் வாரத்தில், பறவை, வண்ணத்துப் பூச்சி, தும்பி ஆகியவற்றின் கணக்கெடுப்பு நடந்தது.


திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கம் தலைமையில் நடந்த கணக்கெடுப்பில், அச்சங்கத்தின் இணை ஆராய்ச்சியாளர் காலேஷ் சதாசிவன், மூணாறு வனவிலங்கு காப்பாளர் ஹரிகிருஷ்ணன், உதவிக் காப்பாளர் நிதின்லால் மற்றும் சமூக அமைப்புகள், ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


கணக்கெடுப்பின்போது புதிதாக, 11 வகை பறவை உட்பட, 217 வகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. எட்டு புதிய வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 166 வகை கண்டறியப்பட்டதால், அதன் எண்ணிக்கை, 246 வகையாக அதிகரித்தது.

Advertisement