விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.8.60 லட்சம் காணிக்கை
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 339 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
காணிக்கை எண்ணும் பணியில் அர்த்தஜாம அடியார் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதில், 8 லட்சத்து 60 ஆயிரத்து 339 ரூபாய் ரொக்கம், 5 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement