சிறுவனை கட்டையால் அடித்த வாலிபர் கைது

கரூர்: க.பரமத்தி அருகே, சிறுவனை கட்டை யால் அடித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.


கரூர் மாவட்டம், க.பரமத்தி கிரஷர் மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 39; இவருடைய மகன் மகிழ், 12; இவர், அதே பகு-தியை சேர்ந்த விமல், 13; என்பவருடன் சேர்ந்து கடந்த, 17ல், கிரஷர் மேடு சிமென்ட் குடோனில்

கிரிக்கெட் ஆடியுள்ளார். அப்-போது, மகிழுக்கும், விமலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகு-றித்து தந்தை வேலுசாமியிடம், மகிழ் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வேலுசாமி, கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த விமலை

கட்டையால் அடித்துள்ளார். அதில், நெஞ்சில் காயம-டைந்த விமல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, விமலின் தாய் ஜானகி, 40, கொடுத்த புகார்படி, க.பரமத்தி

போலீசார் வேலுசா-மியை கைது செய்தனர்.

Advertisement