உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: அதிபர் டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
பதவியேற்ற பின், அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் நாள் பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
* அமெரிக்கா பார்லிமென்ட் கலவர வழக்கில், தொடர்புடைய 1,500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்.
* உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. கோவிட் தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவிய போது, உலக சுகாதார அமைப்பு தனது கடமையை செய்யவில்லை.
* கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்புத் தளத்தை திடீரென நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன். டிக் டாக் செயலி மீதான தடையை 75 நாட்களுக்கு தாமதப்படுத்தும் நிர்வாக நடவடிக்கை எடுப்பேன்.
* அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம்.
* சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும்.
* பனாமா கால்வாயில், அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால், அந்த கால்வாய் அமெரிக்காவோடு மீண்டும் இணைக்கப்படும்; அதை சீனா நிர்வகிக்க தேவையில்லை.
* மின் வாகனம் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்; விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் உறுதி செய்யப்படும்.
* துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.
* கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களை, ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். இவ்வாறு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (11)
subramanian - Mylapore,இந்தியா
21 ஜன,2025 - 12:39 Report Abuse
ஐ.நா சபை வீட்டோ அதிகாரத்துடன் கொடுத்த பதவியை நேரு வேண்டாம் என்று கூறி விட்டார். இப்போது மோடி பல முயற்சி செய்து வருகிறார். வீட்டோ அதிகாரம் கொடுத்தால் ஐ.நா சபையில் இருக்கலாம் இல்லையா வெளியேற வேண்டும்.
0
0
Reply
Ramona - london,இந்தியா
21 ஜன,2025 - 11:09 Report Abuse
சரியான முடிவு, இந்த அமைப்புகளால் எந்த பயனும் கிடையாது, அபர தண்டம், வீண் செலவு, பந்தா , ஊழியர்களுக்கு பகட்டு வாழ்வு, வாழ் நாள் முழவதும் வருமான வரி இல்லாத பென்க்ஷன். வேண்டாத தணடம்.
0
0
Reply
Srprd - ,
21 ஜன,2025 - 10:33 Report Abuse
Also please take action against Indian IT companies who are deliberately paying less than the minimum stipulated H1B wages. Enough of their exploitation.
0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
21 ஜன,2025 - 10:25 Report Abuse
இந்தியாவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலக வேண்டும். கொரோனா சமயத்தில் இந்தியாவுக்கு மிகக்கேவலமாக தொந்தரவு செய்தார்கள். மேலும் அவர்கள் குடுக்கும் ஒவ்வொரு அளவீடுகளும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.
0
0
Reply
GoK - kovai,இந்தியா
21 ஜன,2025 - 10:20 Report Abuse
ஐக்கிய பொதுநாட்டு சபையும் சரி அதன் சார்பு சங்கங்களும் சரி சீனாவின் இல்லை ஏதாவது வல்லரசின் கைப்பாவைகளாகத்தான் செயல் பட்டு வருகின்றன. எந்த சண்டையையும் நிறுத்தியதோ சமாதானம் செய்ததோ இல்லை. காசு தான் விரயம். இந்தியாவும் அந்த பணத்தை இந்த நாட்டிலேயே செலவழித்தால் உபயோகமாக இருக்கும் . இது போலத்தான் இந்த இங்கிலாந்தின் பொது தன அமைப்பிலிருந்தும் இந்தியா விலக வேண்டும் அது ஒரு ஆதித்யபத்தின் அறிகுறி.
0
0
Reply
Karthik - ,இந்தியா
21 ஜன,2025 - 10:07 Report Abuse
W H O is a dummy piece.
If no power, no need this.
0
0
Reply
Sambath - ,இந்தியா
21 ஜன,2025 - 09:54 Report Abuse
நாமும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும்
0
0
Reply
ஆரூர் ரங் - ,
21 ஜன,2025 - 09:33 Report Abuse
ஜனதா ஆட்சியில் தனக்கு ஆதரவாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய இரு பயங்கரவாதிகளுக்கு பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ சீட் கொடுத்து அழகு பார்த்தார் இந்திரா. அதே பயங்கரவாதம் அவரது உயிரைப் பறித்தது. டிரம்ப் இதை உணர்வாரா?
0
0
Reply
Laddoo - Bangalorw,இந்தியா
21 ஜன,2025 - 09:08 Report Abuse
//...கொரோனா தடுப்பூசி போட மறுத்ததற்காக ..// சரியானது அல்ல. கலகம் செய்தவர்களை விடுவித்ததும் சரியல்ல
0
0
SANKAR - ,
21 ஜன,2025 - 09:46Report Abuse
please read what Biden did for his son for protecting him from going to prison
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement