கோவை ஈஷா பவுண்டேசன் ரத ஊர்வலம் க.பரமத்தி வந்தது

கரூர்: ஈஷா பவுண்டேசன் சார்பில், மஹா சிவராத்திரி விழாவை-யொட்டி, ரத ஊர்வலம் நேற்று க.பரமத்திக்கு வந்தது.


நாடு முழுவதும் வரும் பிப்., 26ல், மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. கோவை ஈஷா பவுண்டேசன் சார்பில், தமிழகத்தில் சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கரூரில் வரும் பிப்., 26ல், வி.என்.சி., மஹாலில் ஈஷா பவுண்டேசன் சார்பில், சிவராத்திரி விழா கொண்டாடப்படு-கிறது. அது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப-டுத்தும் வகையில், ரத ஊர்வலம் ஈரோடு மாவட்டம் பெருந்து-றையில்

இருந்து, நேற்று காலை கரூர் மாவட்டம், க.பரமத்திக்கு வந்தது. அதில், ஆதியோகி சிவன் திருவுருவம் இடம் பெற்றிருந்-தது. அதற்கு, பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். பிறகு ரதம் தென்னிலை, சின்னதாராபுரம்,

அரவக்குறிச்சி, வெள்ளி-யணை, மாயனுார், லாலாப்பேட்டை, பசுபதிபாளையம் பகுதிக-ளுக்கு சென்றது. அந்தந்த பகுதிகளில், ரதத்துக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.

Advertisement