மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விக்கிரவாண்டி வட்டார வளமையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார்.

பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர் .

பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மருத்துவமில்லா தொழில் சார் மருத்துவர் மாணிக்கராஜா, ஆசிரியர் பயிற்றுனர்கள் சின்னராஜ், மேரிகரோலின் ராணி , சுரேஷ், பிரித்தா ஆனீ அருள் ஜாய்சி, சிலம்பரசன், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement