கரூர்-திருச்சி பாதையை இரட்டை ரயில்வே பாதையாக மாற்ற சர்வே பணி
கரூர்: கரூர்-திருச்சி ரயில்வே பாதையை, விரைவில் இரட்டை பாதை-யாக மாற்ற சர்வே பணிகள் தொடங்க உள்ளது.
சேலம்-கரூர் ரயில்வே பாதை கடந்த, 2013, கரூர்-திண்டுக்கல் ரயில்வே பாதை, 1985ல், அமைக்கப்பட்டது. இதையடுத்து, கரூர் நகரை சுற்றியுள்ள, ஒற்றை ரயில்வே பாதையை, இரட்டை ரயில்வே பாதையாக மாற்ற, மத்திய பொது பட்ஜெட்டில் சில ஆண்டுகளுக்கு முன், அறிவிப்பு வெளியானது. அதில், ஈரோடு-க-ரூர்-திருச்சி ரயில்வே பாதை குளித்தலை வழியாக, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. அதில், ஈரோடு -கரூர் வரையிலும்
மட்டும் உள்ள, ஒற்றை ரயில்வே பாதையை, இரட்டை பாதை-யாக மாற்ற, 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திட்டப்பணிகள் ஆய்வில் உள்ளது. இந்நிலையில், கரூர்-குளித்தலை-திருச்சி வரை-யிலான ஒற்றை ரயில்வே
பாதையை, இரட்டை பாதையாக மாற்ற, சர்வே பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வே வாரியம் ஆலோசனைபடி, பழமை வாய்ந்த ஈரோடு-க-ரூர்-குளித்தலை-திருச்சி ஒற்றை ரயில்வே பாதை தான், இரட்டை பாதையாக மாற்ற ஆய்வு
செய்யப்பட்டது. ஆனால், கரூர் -குளித்-தலை-திருச்சி வரை, ஒரு பக்கம் காவிரியாறும் மற்ற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது.
இதை தவிர ஆங்காங்கே, ஏற்கனவே உள்ள ஒற்றை ரயில்வே பாதையை சுற்றி, காவிரியாற்றின் கிளை வாய்க்கால்கள் செல்கி-றது. இதனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. ஆங்-கிலேயர் காலத்தில், எப்படியோ,
ஒற்றை ரயில்வே பாதையை அமைத்து விட்டனர். தற்போது, மக்கள் தொகை பெருக்கம் கார-ணமாக, கரூர்-குளித்தலை-திருச்சி வரை, ஒற்றை ரயில்வே பாதையை சுற்றி, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒன்றை
ரயில்வே பாதை குறுக்கும், நெடுக்குமா வளைந்து செல்-வதால், இரட்டை ரயில்பாதை அமைக்க பெரும் சவாலாக உள்-ளது. இதனால், முதல் கட்டமாக ஈரோடு-கரூர் வரை இரட்டை ரயில் பாதை அமைக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரூர்-குளித்தலை-திருச்சி வரை, இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து விரைவில் சர்வே பணிகள் தொடங்க உள்-ளது. ஆனால், சேலம்-கரூர்-திண்டுக்கல் ஒற்றை ரயில்பாதையில், வாங்கல்-மோகனுார் இடையே
மட்டும் காவிரியாறு செல்கிறது. அந்த இடத்தில், இரட்டை பாதை அமைக்க இடம் தயாராக உள்-ளது. கரூர்-திண்டுக்கல் பாதையில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால், சேலம்-கரூர்-திண்டுக்கல் ரயில்வே பாதையில்,
இரட்டை ரயில்பாதை அமைக்க பணிகள் விரைவில் துவங்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.