மரவள்ளி அறுவடை தீவிரம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியனில் மானாவாரியாகவும், பாசன முறை-யிலும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டி-கையை ஒட்டி, கடந்த, 10 நாட்களுக்கு முன் கிழங்கு மில்களில் அரவை நிறுத்தப்பட்டது. இதனால்,
விவசாயிகளும் கிழங்கு அறு-வடையை நிறுத்தி வைத்திருந்தனர். பண்டிகை முடிந்து, நேற்று அனைத்து மில்களிலும் அரவை தொடங்கியது. இதையடுத்து, விவசாயிகள் தங்களது நிலங்களில் உள்ள மரவள்ளி கிழங்கை
அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்-றனர். மரவள்ளி கிழங்கு பாயின்ட்டுக்கு, 260 முதல், 270 வரை கிடைக்கிறது. சராசரியாக ஒரு மூட்டை கிழங்குக்கு செலவுபோக, 450 ரூபாயில் இருந்து, 500 ரூபாய்
வரை கிடைக்கும். பண்டிகை முடிந்தால் விலை, 550 ரூபாய் வரை கிடைக்கும் என, எதிர்-பார்த்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், நீண்ட நாட்கள் கிழங்கை அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியாது என்பதால்
சுறுசுறுப்பாக அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.