மின் கணக்கீடு மாற்றம்

திருப்பூர்; வீரபாண்டி, குறிஞ்சி நகர் பகிர்மான பகுதிகளில், மின் கணக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மின் கோட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வீரபாண்டி உபகோட்டம், வீரபாண்டி பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, குறிஞ்சி நகர் பகிர்மானம், மின் கட்டண கணக்கீடு, இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர், மின் கணக்கீடு நடத்தப்படும்; கணக்கீடு செய்த நாளில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement