மருத்துவக் கல்லுாரி 'லோகோ' இடம் பெறப்போவது என்ன?

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி கடந்த, 2022 ஜன., மாதம் திறக்கப்பட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்கி, அந்த ஆண்டு ஜூன் முதல் கல்லுாரி செயல்பட துவங்கியது. தற்போது, 100 மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயின்று வருகின்றனர்.

மருத்துவக் கல்லுாரி செயல்பட துவங்கி, மூன்று ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. கல்லுாரி நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 'லோகோ' வில் முழுமையாக வாசகம் அல்லது ஆண்டு எழுதப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மாணவர்கள், நோயாளிகளுக்கு இது ஒரு குறையாகவே உள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன் கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரி லோகோவில் ஆண்டு குறிப்பிடுவதில்லை. மருத்துவக் கல்வி இயக்ககத்தின் 'லோகோ'வில் உள்ளது போல், 'வாய்மையே வெல்லும்' என்ற வாசகம் இடம் பெறும்,' என பதிலளித்தார்.

Advertisement