அண்ணா பல்கலை பயிலரங்கு; அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
திருப்பூர்; சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் பயிலரங்கில் பங்கேற்க, அரசு கல்லுாரி மாணவர் தேர்வாகியுள்ளார்.
நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சென்னை, அண்ணா பல்கலையில், இன்று முதல் வரும், 23ம் தேதி வரை 'சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பது' எனும் தலைப்பில் பயிலரங்கம் நடக்கிறது.
இதில், 120 மாணவர்கள் பங்கேற்கின்றனர். பயிலரங்கில் பங்கேற்க கோவை பாரதியார் பல்கலையில் இருந்து ஒன்பது பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் விஸ்வபாரதியும் ஒருவர். தேர்வாகிய மாணவரை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு - 2 திட்ட அலுவலர் மோகன் குமார், வணிகவியல் துறைத்தலைவர் அமிர்தராணி உட்பட பலர் பாராட்டி, வழியனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement