அனல்மின் நிலைய 2வது அலகில் உற்பத்தி துவக்கம்

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலைய, இரண்டாவது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.


சேலம் மாவட்டம், மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த டிச., 19ல், மூன்றாவது அலகில் ஏற்பட்ட விபத்தில் இருவர்

உயிரிழந்தனர். அந்த அலகில் மின் உற்பத்தி இன்னமும் துவங்காத நிலையில், இதர அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த, 18ல், இரண்-டாவது அலகில் கொதிகலனுக்கு செல்லும் குழாயில், பழுது ஏற்-பட்டதால்

மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பழுது பார்க்கும் பணிகள் முடிந்து நேற்று காலை, 8:30 மணிக்கு மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கிய நிலையில் மதியம், 2:00 மணிக்கு, 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்-பட்டது. நேற்று மாலை முதல், 1,2,4

ஆகிய மூன்று அலகுகளில், 600 முதல், 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

Advertisement