விரைவில் 2,553 டாக்டர் பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் சுப்ரமணியன்

சேலம்: ''தமிழக அரசு மருத்துவமனைகளில், 2,553 டாக்டர் பணியிடம் விரைவில் நிரப்பப்பட உள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.


சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சுகாதாரத்-துறை அமைச்சர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், டீன் தேவிமீனாள் தலைமையில், அனைத்து மருத்துவத்-துறை தலைவர்களுடன்

ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் சுப்ரமணியன் நிருபர்
களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுகாதாரத்-துறையின் கீழ், 220 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்ட-மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் பல பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடந்து

வருகின்றன. தமிழ-கத்தில் மருத்துவ துறையில் இதுவரை, 23,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து, 2,553 மருத்துவர் பணியிடங்கள், 15 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. அதன்மூலம், சேலம் அம்மா-பேட்டை புறநகர்

மருத்துவமனை டாக்டர் பணியிடமும் நிரப்பப்-பட உள்ளது. அங்கு சிறுநீரக பாதிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை விரைவில் தொடங்க உள்ளது.
சேலம், கோவை, தஞ்சை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் அதிநவீன 'பெட்-சிடி' கருவி பொருத்தப்பட்டு, சேலத்தில் மட்டும், 1,971 பேருக்கு புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை

மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிநவீன கேத்லேப் மூலம் சேலத்தில், 2,800 பேருக்கு ஸ்டண்ட் டியூப் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மருத்துவ
மனைக்கு தினமும், 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படு-வதால், மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ-துடன், புதிதாக போர்வெல் போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்-டுள்ளது. செயலிழந்துள்ள அனைத்து

லிப்ட்களும் பழுது நீக்கப்-படும். 3,000 ஆக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை தற்-போது, 4,500 ஆக அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப கூடுதல் பணி-யிடம், கட்டடம் கட்டுவது தொடர்பான பரிசீலனை நடந்து வரு-கிறது.

இவ்வாறு கூறினார்.
கலெக்டர் பிருந்தாதேவி,மேயர் ராமச்சந்திரன், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உடனி-ருந்தனர்.

Advertisement