வேட்பு மனுவை வாபஸ் பெற்ற மாஜி அ.தி.மு.க., பொறுப்பாளர்
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளராக பொறுப்பு வகித்த செந்தில்முருகன், கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இடைத்தேர்தலில்
போட்டியில்லை என கட்சி தலைமை அறிவித்த நிலையில் சுயேட்சையாக களமிறங்கி-யதால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டது. மனு ஏற்கப்பட்ட நிலையில் 'கட்சி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை' என்று
செந்தில்முருகன் கூறினார். இதனால் அ.தி.மு.க.,வில் இருந்து, செந்தில்முருகன் நேற்று முன்தினம் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்ற செந்தில்-முருகன் கூறியதாவது: ஈ.வெ.ரா.,வை பற்றி இழிவாக சீமான் பேசி வரும் நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடாமல் அ.தி.மு.க., தவிர்த்தது. சீமானை
எதிர்க்கவே மனுத்தாக்கல் செய்தேன். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கியதால் எனக்கு கவலை-யில்லை. இவ்வாறு அவர் கூறினார்.