கர்நாடகாவிலும் டவுனியா நோய் 50 சதவீத விளைச்சல் பாதிப்பால் ரோஜா விலை எகிறியது
ஓசூர்: தமிழக எல்லையான ஓசூரை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்-திலும் டவுனியா நோய் தாக்கம் அதிகமாக உள்ளதால், 50 சத-வீதம் வரை ரோஜா விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்து வருகிறது.
தமிழக எல்லை நகரான ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள தேன்க-னிக்கோட்டை, சூளகிரி, தளி சுற்றுப்புற பகுதிகளில் நிலவும் சீதோஷண நிலையை பயன்
படுத்தி, 2,500 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா, ஜெர்-புரா, கிரசாந்திமம், கார்னேசன் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, 1,600 ஏக்கரில் ரோஜா வகைக-ளான தாஜ்மகால், பர்ஸ்ட் ரெட்,
அவலாஞ்சி, நோப்லஸ், கார்வெட், கோல்ட் ஸ்டிரைக் போன்ற மலர்களை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர்.
சீதோஷண நிலை மாற்றம்
காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் முக்கிய பண்-டிகை நாட்களில், பெங்களூரு வழியாக வெளி
நாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதியாகும். உள்ளூர் சந்தைக-ளுக்கும் ரோஜாக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கடந்த நவ., மாதம்
முதல், ரோஜா செடிகளில் டவுனியா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுவாக பசுமை குடில்களில் இரவு நேரத்தில், 18 முதல், 20 டிகிரியும், பகல் நேரத்தில், 28 முதல், 30 டிகிரியும் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு
வெப்பநிலை நிலவுவதில்லை.
டவுனியா நோய் தாக்கம்
இருந்தாலும், வரும் காதலர் தினத்திற்கு உள்ளூர் மற்றும் வெளி-நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, நல்ல தரமான ரோஜாக்களை சாகு-படி செய்யும் பொருட்டு, கடந்தாண்டு டிச., முதல் வாரத்தில் இருந்து, 18ம் தேதி வரை, பசுமை
குடில்களில் மண் சீரமைப்பு பணி, உரமிடுதல், செடிகளை கவாத்து செய்தல் போன்ற பணி-களை விவசாயிகள் மேற்கொண்டனர். அதன் மூலம் நல்ல தர-மான ரோஜாக்கள் விளைவிக்கப்படும். அவற்றை வெளிநாடுக-ளுக்கு
ஏற்றுமதி செய்யலாம் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்தாண்டு நவ., மாதம் துவங்கிய சீதோஷண நிலை மாற்றம், இன்று வரை சரியாகவில்லை. அதனால் ரோஜா செடி-களில் டவுனியா நோய் தாக்கம்
குறையவில்லை. அதன் காரண-மாக, வெளி
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தரமான ரோஜாக்களை விளைவிப்பது சவாலான விஷயமாக உள்ளது. ரோஜா உற்பத்தி, 50 சதவீதம் வரை குறைந்துள்ளதால், ஒரு ரோஜாவின் விலை தற்-போது உள்ளூர் சந்தையில்
உயர்ந்து வருகிறது.
இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசி-வப்பிரசாத் கூறியதாவது: நாட்டில் புனே, நாசிக்கை தொடர்ந்து, கர்நாடகாவின், சிக்கபெல்லாபூர், தொட்டபெல்லாபூர், கோலார் ஆகிய பகுதிகள் மற்றும் தமிழக
எல்லையான ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் தான் ரோஜாக்கள் அதிகமாக விளைச்சல் செய்யப்படு-கின்றன. இதில், புனேவில் விளைவிக்கப்படும் ரோஜாக்கள் மீது வலை போடுவதில்லை. அதனால், புனேவில் விளைச்சல்
அதிக-மாக இருந்தாலும், அவற்றை விரும்பி பல நாடுகளில் வாங்க மாட்டார்கள். ஓசூர் ரோஜாக்கள் மீது வலை போட்டு விளைவிக்கப்படும். அதனால், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிசியஸ், ஐக்கிய அரபு நாடுகளில்
விரும்பி வாங்குகின்றனர். ஓசூரில் டவுனியா நோய் தாக்கம் ஏற்படும் போது, கர்நாடகா மாநிலத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கர்நாடகாவின் சிக்கபெல்லாபூர், தொட்டபெல்லாபூர், கோலார் ஆகிய பகுதி
களிலும் டவுனியா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அவற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதனால் ரோஜா விளைச்சல், 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தரம் வாய்ந்த மலர்கள் குறைந்து விட்டது.
வெளிநாடு ஏற்றுமதி
வரத்து குறைந்துள்ளதால் உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா, 17 ரூபாய் வரை தற்போது விற்பனையாகிறது. காதலர் தினம் நெருங்-குவதற்குள், 22 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது. ஏற்று-மதி சந்தைக்கு இன்னும் விலை
நிர்ணயம் செய்யப்படவில்லை. ஜன., இறுதி அல்லது பிப்., முதல் வாரத்தில் காதலர் தின ஏற்று-மதி ஆர்டர் உறுதியாகும். ஓசூரில் இருந்து கடந்தாண்டு காதலர் தினத்திற்கு, 45 லட்சம் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி-யாகின. ஆனால், தற்போது ரோஜா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்-ளது. மேலும், உள்ளூர் சந்தையில் அதிக விலை போகிறது. முகூர்த்த நாட்களும் அதிகமாக வர உள்ளது. அதனால் உள்ளூர் சந்தைகளுக்கு ரோஜாக்களை
வழங்கவே விவசாயிகள் விரும்பு-கின்றனர். எனவே வெளிநாடு ஏற்றுமதி குறையலாம். பசுமை குடில்களில் இரவில், 16 டிகிரியும், பகலில், 25 டிகிரி வெப்பநி-லையே நிலவுகிறது. சீரான சீதோஷண நிலை இல்லாததால்,
வழக்கத்தை விட இந்த ஆண்டு டவுனியா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. செடிகளை காப்பாற்றுவதே சிரமமாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.