மக்கள் குறைதீர் கூட்டம் 383 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், பட்டா மாறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 383 மனுக்கள் வந்தது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.15 ஆயிரம் வீதம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியை வழங்கினார்.
சென்னை சங்கமம் நிகழ்வில், பங்கேற்று முதல்வரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழுவினர், கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சிவக்கொழுந்து (நிலம்), ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.